புஞ்சைபுளியம்பட்டி பஸ்நிலைய கழிப்பறையில் இறந்து கிடந்த கூரியர் நிறுவன ஊழியர்;போலீசார் விசாரணை

புஞ்சைபுளியம்பட்டி பஸ்நிலைய கழிப்பறையில் கூரியர் நிறுவன ஊழியர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி பஸ்நிலைய கழிப்பறையில் கூரியர் நிறுவன ஊழியர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூரியர் நிறுவன ஊழியர்
நசியனூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் கூரியர் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 25-ந் தேதி புஞ்சை புளியம்பட்டி பகுதியில் கூரியர் பார்சல்கள் கொடுத்து விட்டு இரவு புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அதன்பின்னர் நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. மேலும் உள்ளே இருந்து செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால் சந்தேகம் அடைந்த நகராட்சி பணியாளர்கள் கழிப்பறைக்குள் சென்று பார்த்தார்கள்.
விசாரணை
அப்போது ஆறுமுகம் கீழே விழுந்த நிலையில் செத்துக்கிடப்பது தெரியவந்தது. உடனே இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் எப்படி இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.