புற்றடி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்
மயிலாடுதுறை
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை முதல் வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றப்பட்டு, 2-ம் வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மேலவீதி, தெற்கு வீதி வழியாக நிலையை அடைந்தது. முன்னதாக மாணவர்களின் கோலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story