வெறிநோய் தடுப்பூசி முகாம்

வெறிநோய் தடுப்பூசி முகாம்
திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ் அறிவுறுத்தலின் பேரில் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கீதா பூமிநாதன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர்கள் அசன் இப்ராஹிம், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி டாக்டர் சிவப்பிரியா வரவேற்றார். இதில் கால்நடை உதவி டாக்டர்கள் முத்துகுமரன், பிரியதர்ஷினி, அருண், பூபதி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் விலங்குகள் வதை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் புத்தகரம், ஏனங்குடி, ஆதலையூர் உள்ளிட்ட கிராம பகுதியில் உள்ள 132-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் ஊராட்சி செயலர் உதயகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் புளோரா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.