காரைக்குடியில் பலத்த மழை

காரைக்குடியில் பலத்த மழை பெய்தது.
சிவகங்கை
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் மதியம் வரை வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதன் பின்னர் மாலை 4 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. காரைக்குடி, மானகிரி, ஆலங்குடி, தேவகோட்டை ரஸ்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதனால் தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்ததால் இரவு முழுவதும் குளுமையான சூழ்நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story