ராணி வேலுநாச்சியார் நினைவு தினம்


ராணி வேலுநாச்சியார் நினைவு தினம்
x

சிவகங்கையில் ராணி வேலுநாச்சியார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

சிவகங்கை

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு முதன் முதலில் சுதந்திரப் போராட்டத்தை தொடங்கி மீண்டும் தனது நாட்டை பிடித்த முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியாரின் 226-வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதைெயாட்டி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது. முன்னதாக அவரது வாரிசான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ஊழியர்கள் அவரது நினைவிடத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராணி வேலுநாச்சியார் நினைவிடத்திற்கு சென்று அங்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.மேலும் தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் ஏராளமான சமுதாய அமைப்பினர் வந்து மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story