'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்'போலீசாரிடம் ஆசிரம நிர்வாகி வாக்குவாதம்

‘முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று போலீசாரிடம் ஆசிரம நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
விழுப்புரம்
விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் உள்ள ஆசிரம விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதன் நிர்வாகி, ஜூபின்பேபி, தன்னை குரங்கு கடித்ததாக கூறி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரை, போலீசார் நேற்று மாலை வரை கைது செய்யவில்லை.இந்நிலையில் ஜூபின்பேபியை கைது செய்ய நேற்று இரவு, போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது மருத்துவமனை வார்டில் இருந்து வெளியே வந்த ஜூபின்பேபி அங்கிருந்த போலீசாரிடம், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள், என் மீது எந்த தவறும் இல்லை என்றுகூறி கடும் வாக்குவாதம் செய்தார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story