ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது


ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
x

ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர்

வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் மோட்டூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் கடந்த மாதம் 7 டன் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்துக்கு லாரியில் கடத்தி செல்ல முயன்றார். வேலூர் உட்கோட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியின் அருகே ரேஷன் அரிசியுடன் லாரியை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

தொடர்ந்து அவர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு டி.ஜி.பி. ஆபாஷ்குமார் அறிவுறுத்தினார். அதன்பேரில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி சென்னை மண்டல போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story