ரூ.15 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம்
மயிலாடும்பாறை அருகே ரூ.15 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடத்தை மகாராசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
தேனி
மயிலாடும்பாறை அருகே பொன்னன்படுகை கிராமத்தில் நூலக கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் ரேஷன் கடைக்கு கட்டிடம் கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடை புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு ஆண்டிப்பட்டி மகாராசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கடையில் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனையை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் கடமலை-மயிலை ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கபாண்டி, மயிலாடும்பாறை கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story