விஷம் தின்று ரேஷன் கடை ஊழியர் தற்கொலை


விஷம் தின்று ரேஷன் கடை ஊழியர் தற்கொலை
x

வலங்கைமான் அருகே விஷம் தின்று ரேஷன் கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்

வலங்கைமான், ஜூன்.2-

வலங்கைமான் நடுநாராயணன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு. இவருடைய மகன் செல்வமணி (வயது33). இவர் தெற்கு பட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியுடன் இணைந்த பயரி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வந்தார். செல்வமணி கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் சல்வமணிவயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வலங்கைமான் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வமணி இறந்தார். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story