வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
x

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் பருவமழைக்கான மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாட்டில் பருவமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

மழை பாதிப்பு கடந்த ஆட்சியை விட தற்போது எப்படி உள்ளது என அனைவருக்கும் தெரியும். இந்த மழைக்கு அங்க தண்ணீர் எதுவும் தேங்கல, எல்லா பகுதிகளிலும் எங்களால் முடிஞ்சவரை பணிகளை செய்துள்ளோம்.

சென்னை மட்டுமல்ல மற்ற மாவட்டங்களிலும் மழையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்காக 5,302 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 4 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அனைத்து அமைச்சர்களும் களத்தில் உள்ளனர்.

மாநில அவசர கட்டுப்பாட்டு மையமும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையமும் கூடுதல் அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இந்த மையங்களை பொது மக்கள் 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story