பந்தலூரில் சமரச விழிப்புணர்வு முகாம்
பந்தலூரில் சமரச விழிப்புணர்வு முகாம்
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் நீதிமன்றம் சட்டபணிகள் குழு சார்பில், சமரச விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நீதிபதி சிவக்குமார் தலைமை தாங்கி மக்கள் தங்களின் நீண்டநாள் வழக்குககளை வழக்கு தரப்பினர்கள் சமரசர் முன்னிலையில் பேசி சுமூகதீர்வு காண்பது மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. வக்கீல்கள் சினு, வர்க்கீஸ், கணேசன், சிவசுப்பிரமணியம், ஜான்சன், சவுக்கத் உள்பட நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story