கல்வெட்டு எழுத்துகள் குறித்துசமணர் படுகையில் மாணவிகளுக்கு பயிற்சி

உத்தமபாளையம் அருகே கல்வெட்டு எழுத்துகள் குறித்து சமணர் படுகையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், வரலாற்றுத்துறை சார்பில் மாணவிகளுக்கு அருங்காட்சியகம் மற்றும் கல்வெட்டியல் எழுத்துகள் குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. முதற்கட்டமாக ஆண்டிப்பட்டி அரசு அருங்காட்சியகத்தில் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் கோமதி, சுசீலாசங்கர், சரண்யா, வரலாற்றுத்துறை தலைவர் சாந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
மதுரை அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியன் கலந்துகொண்டு அருங்காட்சியகம் மற்றும் கல்வெட்டு எழுத்துக்கள் குறித்து பேசினார். அதன்பிறகு உத்தமபாளையத்தில் உள்ள சமணர் படுகைக்கு மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சமணர் படுகையை பார்வையிட்ட மாணவிகளுக்கு சமணர்கள் வரலாறு, சமணர் கால பாறை சிற்பங்கள் மற்றும் கல்வெட்டு எழுத்துகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வரலாற்றுத்துறை பேராசிரியை மலர்விழி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.