ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை


ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து  தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து தமிழக-கேரள அதிகாரிகள் ஆலாசனை நடத்தினர்.

தேனி

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து தமிழக மற்றும் கேரள உணவு கடத்தல் தடுப்பு போலீசார் இடையேயான ஆலோசனை கூட்டம் கம்பத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணி தலைமை தாங்கினார். இடுக்கி மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சுனில் பாபு, தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தும் வாகனங்கள், கடத்தல்காரர்களை அடையாளம் காட்டி தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். ரசாயனம் கலந்த அரிசி விற்பனையை தடுக்க வேண்டும் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, கேரள அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார். மேலும் தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசி பதுக்கலை தடுக்க சோதனை நடத்தப்படும் என கேரள அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் வட்ட வழங்கல் அலுவலர்கள் பாண்டியன் (உத்தமபாளையம்), ராமராஜ் (போடி), கேரள மாநிலம் கம்பம்மெட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் லால்பாய், மனோஜ் மாத்யூ, உடும்பன்சோலை தாசில்தார் ராஜா, பீர்மேடு துணை தாசில்தார் ஜீவா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story