3 ஏக்கர் ஆக்கிரமிப்பு பயிர்கள் அகற்றம்
தண்டராம்பட்டு அருகே 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு பயிர்கள் அகற்றப்பட்டன.
திருவண்ணாமலை
தண்டராம்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த வணக்கம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட துள்ளு குட்டிபாளையம் பகுதியில் வீரப்பன் தாங்கள் பெரிய ஏரி 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
ஏரிக்கரையை சுற்றியுள்ள விவசாயிகள் மணிலா, நெல், சோளம் உள்ளிட்ட பயிர் வகைகளை 3 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்து பயிர் வைத்துள்ளனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தாசில்தார் பரிமளா, மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் அளவீடு செய்து, பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றினர்.
Related Tags :
Next Story