ரேணுகாதேவி மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா

திருவெண்காடு அருகே எம்பாவை ரேணுகாதேவி மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா நடந்தது.
மயிலாடுதுறை
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே எம்பாவை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரேணுகாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்றுமுன்தினம் மாலை முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் ஏரி கரையிலிருந்து பால்காவடி, அலகு காவடி உள்ளிட்டவைகளை மேளம் தாளம் முழங்கிட ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து கோவிலின் வாசலில் இருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story