பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா

நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பேட்டை:
நெல்லை தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா நடந்தது. நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி வரவேற்று பேசினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் கல்லூரி செயலர் ஜி.ஜெயச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி என்.ரத்தினராஜ் கலந்து கொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் எஸ்.சுதாகர் ஐசக், காசாளர் ராஜேஷ் ஆனந்தசெல்வன், மெர்க்கன்டைல் வங்கி காவலர் சுப்பையா ஆகியோர் பேசினார்கள். ஏற்பாடுகளை கல்லூரி இளைஞர் நலன் மற்றும் நுண்கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜெபராஜ் கிங்ஸ்லி சகரியா, தேசிய மாணவர் படை அலுவலர் ஸ்டான்லி டேவிட், உடற்கல்வி இயக்குனர் ராஜாசிங் ஹரிஸ்டன், ராபின் தீபக், சாமுவேல் ஜூட்பிராங்க் ஆகியோர் செய்திருந்தனர்.
சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் டி.டி.என் கல்வி குழுமத்தின் தலைவர் லாரன்ஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வரவேற்றார். தொடர்ந்து பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மாநில அளவிலான தொழில்நுட்பத்திறன் மேம்பாட்டிற்கான போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப விளக்கம், டெக்னோ ஜாம் மற்றும் கணினி மூலம் பொறியியல் வடிவமைப்பு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வழங்கி பாராட்டினார். பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப விளக்க போட்டியில் ஒவ்வொரு தலைப்பிலும் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டது. மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறை தலைவர் முகமது இபாம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரிய, ஆசிரிையகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
முக்கூடல் சொக்கலால் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கோமதி சங்கர் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மணிராஜ் தேவசகாயம் வரவேற்றார். பேரூராட்சி துணைத்தலைவர் லட்சுமணன் சிறப்புரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர் காண்டீபன் வாழ்த்தி பேசினார். மாணவ-மாணவியர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் கராத்தே நிகழ்ச்சிகள் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் ஜெயராம் நன்றி கூறினார்.
திசையன்விளை அருகே அரசூர் பூச்சிக்காடு ஜாம்ஸ் மரைன் கல்லூரியில் நடந்த விழாவுக்கு கல்லூரி செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கேப்டன் சோமசுந்தரம் முரளி, டீன் கேப்டன் டெரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி கல்வி ஆலோசகர் ஜேக்கப் செந்தில்குமார் வரவேற்று பேசினார். சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி வைத்து 2022-ம் ஆண்டு பல்கலைக்கழக அளவில் பி.எஸ்சி. நாட்டிக்கல் பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர் ஜிஸ்னுமோன்னுக்கு பரிசுக்கோப்பை வழங்கி பாராட்டினார். மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக பிரதிநிதி அண்டோ எபி பெனி, நிர்வாக அலுவலர் பிரின்ஸ் பிரேம்குமார், கேம்பஸ் மேலாளர் வெள்ளைச்சாமி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா ஊராட்சி மன்றத்தலைவர் முருகம்மாள் சிவன்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தமிழரசன், ஓய்வுபெற்ற ஆசிரியர் கோபாலன், பள்ளி மேலாண்மை குழு தலைவி மாலாஸ்ரீ, தலைமை ஆசிரியர் பொ.செல்வராஜ், அங்கன்வாடி மேற்பார்வையாளர் பாக்கியவதி, ஆசிரியர்கள் சாந்தி, ராஜாத்தி, எப்சிபாய், ரூபன் இமானுவேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள புதுக்குளம் பஞ்சாயத்து வீரளப்பெருஞ்செல்வி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் பஞ்சாயத்து தலைவர் சி.முத்துக்குட்டிபாண்டியன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா, உதவிஆசிரியர் நெல்லையப்பன் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.