சர்க்கரை ஆலையை திறக்க கோரிக்கை

மயிலாடுதுறை தலைஞாயிறில் உள்ள சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யூ. மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சர்க்கரை ஆலை
இந்த மாவட்ட மாநாட்டில், மயிலாடுதுறை தலைஞாயிறில் உள்ள என்.பி.கே.ஆர்.ஆர்.சர்க்கரை ஆலையை உடனடியாக திறப்பதோடு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியையும் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை சீரமைத்து நவீனப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும். தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு நாளை அரசு விழாவாக அனுசரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில், நிர்வாகிகள் தேர்வும் நடந்தது. மாவட்ட தலைவராக ரவீந்திரன், செயலாளராக மாரியப்பன், பொருளாளராக கலைச்செல்வன் உள்பட 33 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. அவர்களை வாழ்த்தி மாநில செயலாளர் விஜயன் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.