விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும்காட்டுப்பன்றிகள்,புள்ளிமான்கள் நடமாட்டத்தைகட்டுப்படுத்த கோரிக்கை

குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட 10 கிராமங்களில் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு பன்றிகள், புள்ளிமான்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட 10 கிராமங்களில் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு பன்றிகள், புள்ளிமான்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மான்கள் தொல்லை
தூத்துக்குடி மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.
அப்போது குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனுகொடுத்தனர். அந்த மனுவில், குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட 10 கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் மற்றும் புள்ளிமான்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, காட்டுப்பன்றிகள், புள்ளிமான்களிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குமாரபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து குருமலை வரை நிரந்தரமாக முள்வேலி அமைத்து தரவேண்டும். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 10 கிராம மக்களும் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்று கூறி உள்ளனர்.
நூதன பேராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சிதம்பராபுரத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் பி.அய்யலுசாமி கந்து வட்டி கொடுமையை ஒழிக்கக் கோரி, கழுத்தில் காசோலைகளை மாலையாக கட்டி தொங்கவிட்டப்படியும், கண்ணில் கறுப்பு துணியை கட்டிக் கொண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனுமதி இல்லை என எச்சரித்தனர்.
மேலும், அவரிடம் இருந்த காசோலை மாலை மற்றும் கறுப்பு துணியை பறிமுதல் செய்தனர். பின்னர் உள்ளே சென்று மனு அளிக்க அவரை அனுமதித்தனர்.
அதன்பேரில் அவர் கலெக்டர் அலுவலகம் சென்று கந்துவட்டி கொடுமைகளை தடுக்க கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார்.
காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தூத்துக்குடி- பெருங்குளம் இடையேயான தடம் எண் 52பி அரசு பஸ்சை சிவகளை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.