செட்டியார்களுக்கு தனிநலவாரியம் அமைக்க கோரிக்கை


செட்டியார்களுக்கு தனிநலவாரியம் அமைக்க கோரிக்கை
x

செட்டியார்களுக்கு தனிநலவாரியம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

மலைக்கோட்டை, மே.29-

திருச்சியில் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை மாநகர், புறநகர், ஒன்றிய உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ஆலோசகர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். இளைஞரணி தலைவர் மலேஸ்வரகுமார் வரவேற்றார். இதில் மாவட்ட தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்திந்திய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் டாக்டர் ஏ.கே.புகழேந்தி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேரவை மாநாட்டை பிரமாண்டமாக நடத்த வேண்டும். செட்டியார்களின் குலத்தொழில்களை அங்கீகாரம் செய்து தனி நலவாரியம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவது, ஏழை, எளியவர்களுக்கு அமரர் ஊர்தி, குளிர்சாதன பெட்டி வசதிகள் உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரக்‌ஷன் ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story