ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது
x

நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

நன்னிலம்.

நன்னிலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 75). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு 11 வயது சிறுமி குளிர்பானம் வாங்க சென்றாள். அப்போது கார்த்திகேயன் சிறுமியை கடைக்கு உள்ளே அழைத்து சென்று அவளுக்கு பாலியல் தொல்லை ெகாடுக்க முயன்றதாக தொிகிறது.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறினாள். இது குறித்து சிறுமியின் தாய் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story