கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம்


கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம்
x

கழிவுநீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவை சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மணியில் கூறியிருப்பதாவது:-

மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி 6-வது வார்டு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றபடி கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இங்கு உள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் காவேரி கூட்டு குடிநீர் குழாய் இரண்டும் ஒரே வழியில் குறுகிய பாதையில் செல்வதால் தெரு முழுவதும் கழிவுநீர் குளம் போல் தேங்கி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாயை அகலப்படுத்தி தரம் உயர்த்தி கொடுக்க வேண்டி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி கழிவு நீர் கால்வாயை அகலப்படுத்தி தூர்வாரி தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story