கரூர் கொங்கு மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி பயிற்சி

கரூர் கொங்கு மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி பயிற்சி நடைபெற்றது.
கரூர்
கரூர் கொங்கு மேல்நிலைப்பள்ளி, கரூர் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி இன்ட்ராக்ட் அறிமுக பயிற்சி, பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் பாலு குருசுவாமி வரவேற்று பேசினார். பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் கலந்து கொண்டு ரோட்டரி தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். முதன்மை விருந்தினராக ரோட்டரி ஜெய்பிரகாஷ், ஷோபனா ஆனந்த் கலந்து கொண்டு தலைமை பண்பு மற்றும் உடல் ஆரோக்கியம் பற்றி பேசினர். கந்தராஜன், பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், கரூர் மாவட்ட ரோட்டரி தலைவர் சீனிவாசன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் உத்தமன் செரோமல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் ரோட்டரி தலைவராக பிரதீப்ராஜ், செயலாளராக ராஜ் மிகா, பொருளாளராக தியானேஷ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
Related Tags :
Next Story