ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.2¾ கோடி கொள்ளை: பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறையிடம் ஒப்படைப்பு


ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.2¾ கோடி கொள்ளை: பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறையிடம் ஒப்படைப்பு
x

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டு கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.2¾ கோடி வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு

கடத்தூர்

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டு கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.2¾ கோடி வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரியல் எஸ்டேட் அதிபர்

கோபி வடக்கு பார்க் வீதியை சேர்ந்தவர் சுதர்சன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கோபியில் உள்ள ஒரு வீட்டை வாங்க முடிவு செய்து வீட்டு உரிமையாளரிடம் விலை பேசி முடித்து உள்ளார்.

இதையடுத்து சுதர்சன், ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும், வீட்டை வாங்கியதற்காகவும் ரூ.2 கோடியே 80 கோடி லட்சத்தை புதிதாக வாங்க உள்ள வீட்டின் படுக்கையறையில் உள்ள தனி அறையில் 4 பெட்டிகளில் வைத்து விட்டு அவ்வப்போது சென்று பார்த்துள்ளார்.

சம்பவத்தன்று அவர் அங்கு சென்று பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பையுடன் ரூ.2 கோடியே 80 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி சுதர்சனின் பள்ளிக்கூட நண்பர் ஸ்ரீதரன், அவருடைய தம்பி பிரவீன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து கடந்த 3 மாதங்களாக கோபி போலீஸ் நிலையத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர்.

வருமானவரித்துறையிடம் ஒப்படைப்பு

இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து பணத்தை போலீசார் கோபி முதலாம் வகுப்பு கோர்ட்டில் ஒப்படைத்தனர். அதை பெற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு விஜய் அழகிரி, ஈரோடு வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே பணத்தை சுதர்சனிடம் ஒப்படைக்க முடியும் எனக்கூறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகம் கொண்டு சென்றனர்.

இந்த பணம் நேற்று ஈரோட்டில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.


Next Story