தூத்துக்குடியில் நடந்த வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி கடனுதவி


தூத்துக்குடியில் நடந்த வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி கடனுதவி
x

தூத்துக்குடியில் நடந்த வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி கடனுதவியை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற வங்கி வாடிக்கையாளர் நிகழ்ச்சியில் 35 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி கடனுதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடியில் தனியார், பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.

வாடிக்கையாளர் சந்திப்பு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்; 75-வது சுதந்திரதின நாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் இணைந்து வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 2021-2022-ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 997 பயனாளர்களுக்கு 176 கோடிகடன் உதவி வழங்கப்பட்டு உள்ளதற்கான நிதிஅறிக்கையை ஸ்டேட் வங்கி தூத்துக்குடிமாவட்டமண்டலமேலாளர் முருகானந்தன் வழங்கினார்.

கடன் உதவி

தொடர்ந்து முன்னோடி வங்கி மற்றும் தாட்கோ, எச்.டி.எப்.சி. வங்கி இணைந்து 8 விவசாயிகளுக்கு மானிய விலையில் ரூ.35 லட்சம் மதிப்பிலான டிராக்டர்கள் மற்றும் கடன் உதவிக்கான உத்தரவுக்கடிதம் என 35 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நபார்டு வங்கி மண்டல மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், ரிசர்வ் வங்கிஅலுவலர் மோகன்குமார், தூத்துக்குடி மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் துரைராஜ் மற்றும் வங்கியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story