2 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆய்வு


2 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆய்வு
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி கிடைத்தது. மாநிலம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 45 இடங்களில் ஊர்வலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊா்வலம் நடைபெற உள்ளது. இதற்காக போலீசாரிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கி உள்ளனர். ஊர்வலத்திற்கான கட்டுப்பாடுகளை போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் ஊர்வலத்தையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஊர்வலம் நடைபெறும் 2 இடங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உடன் இருந்தார்.


Next Story