சுயம்வர பார்வதி யாகம்

தர்மபுரியில் சுயம்வர பார்வதி யாகம் நடந்தது.
தர்மபுரி
தர்மபுரி நகரில் மொரப்பூர் மெயின் ரோட்டில் உள்ள கே.பி.ஜே. தங்கமணி திருமண மண்டபத்தில் தமிழ் மேட்ரிமோனி திருமண சேவை மையம் சார்பில் சுயம்வர பார்வதி யாகம் நடைபெற்றது. கோட்டை கல்யாணகாமாட்சி உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவில் அர்ச்சகர் செல்வ முத்துக்குமாரசாமி தலைமையில் அர்ச்சகர்கள் இந்த சிறப்பு யாகத்தை நடத்தினர். திருமண தடைகள் அகற்றி தோஷங்கள் போக்கும் யாகம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டனர். மேலும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் திருமண தடைகள் நீங்க சிறப்பு பரிகாரம் செய்து கொண்டனர். இந்த யாகத்தை தொடர்ந்து சிறப்பு வழிபாடும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த யாகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story