சத்தியமங்கலம் அருகே கோவில் நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


சத்தியமங்கலம் அருகே கோவில் நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

சத்தியமங்கலம் அருகே கோவில் நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே கோவில் நிலத்தை மீட்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

சென்றாய பெருமாள் கோவில்

சத்தியமங்கலம் அடுத்துள்ள கொண்டப்ப நாயக்கன்பாளையத்தில் பழமையான சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை மீட்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தார்கள்.

இந்தநிலையில் கொண்டப்பநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 10 மணி அளவில் அப்பகுதி மக்கள் திரண்டார்கள். பின்னர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜெயபிரியா, கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள், சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை உடனே மீட்கவேண்டும் என்றார்கள்.

அதற்கு அதிகாரிகள் நாளை (அதாவது இன்று) கோவில் நிலத்தை அளவீடு ெசய்யும் பணி நடைபெறுகிறது. அப்போது முடிவு செய்யப்படும் என்றார்கள். அதை ஏற்றுக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து ெசன்றார்கள்.


Next Story