சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் இரும்பு தடுப்பு உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் இரும்பு தடுப்பு உடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம்
சங்ககிரி:
சங்ககிரி ஆர்.எஸ். ரெயில்வே தரைமட்ட பாலம் அருகே ெரயில்வே துறையினர் இரும்பு தடுப்பு அமைத்துள்ளனர். கரூர், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சங்ககிரியை நோக்கி வரும் கனரக வாகனங்கள் அதிக உயரத்துக்கு பாரம் ஏற்றி வரும் போது, அடிக்கடி இரும்பு தடுப்பில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று வந்த ஒரு கனரக வாகனம் இரும்பு தடுப்பு வழியாக சென்ற போது, எதிர்பாராத விதமாக தடுப்பின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் இருப்பு தடுப்பு மற்றும் அதையொட்டி இருந்த கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
Related Tags :
Next Story