சத்தியவாகீஸ்வரர் கோவில் தேரோட்டம்


சத்தியவாகீஸ்வரர் கோவில் தேரோட்டம்
x

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு ஸ்ரீசத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 3-ந் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி காலையில் சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனம் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், கும்பாபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னர் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது. விழாவின் 7-ம் நாளன்று நடராஜர் வெள்ளை சாத்தியும், 8-ம் நாளன்று பச்சை சாத்தியும் காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 9-ம் நாளான நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேகத்திற்கு பின் கோமதி அம்பாள்திருத்தேரில் எழுந்தருளினார். அதனைதொடர்ந்து மாலை 3-50 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்தாண்டு 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.


Next Story