திருவேங்கடம் கலைவாணி பள்ளி சாதனை
மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டியில் திருவேங்கடம் கலைவாணி பள்ளி சாதனை படைத்தது.
தென்காசி
திருவேங்கடம்:
தமிழக அரசு சார்பில் மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இன்பண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் 38 மாவட்டத்தில் உள்ள மாணவிகள் அணிகள்கலந்து கொண்டன. இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டு பெண்கள் இளையோர் பிரிவில் இரட்டையர் ஆட்டத்தில் எப்சிபா, தீபா மாநிலஅளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் தாளாளருமான ஆகிய விபொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story