அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு


அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு
x
திருப்பூர்

திருப்பூர், ஆக.19-

தினத்தந்தியில் வெளியாகி வரும் தீரன் சின்னமலை தொடரை படித்து அதில் உள்ளதற்கு ஏற்ப பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்டவை திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர் அரசு பள்ளியில் நடந்தது. இதை பள்ளி தலைைம ஆசிரியர் லட்சுமிபதி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பிரபு, பகவதி, கவிதா, குமாரவடிவு, மோகனா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் நடத்தினர்.

இந்திய சுதந்திரதின பவள விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் வரலாற்று ெதாடர் எழுதி வரும் கொங்கு பண்பாட்டு மையத்தலைவர் எஸ்.ஆர்.குமார் தீரன்சின்னமலை, திருப்பூர் குமரன் மற்றும் சபாபதி ஆகியோரின் தியாகத்தை மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.

இதையடுத்து ெகாங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கலை இலக்கிய அணி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. கொ.ம.தே.க. மண்டல பொருளாளர் லோகநாதன், மாநகர இளைஞர் அணி செயலாளர் மாடிக்கோவில் செல்வக்குமார், கலை இலக்கிய அணி துணை செயலாளர் லோகநாதன், மாநகர வர்த்தக அணி செயலாளர் பரமேஸ்வரன், இளைஞர் அணி செயலாளர் கோவிந்தராஜ், துணை செயலாளர் யுவராஜ், தொண்டரணி செயலாளர் முருகேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கிழக்கு மண்டல பிச்சம்பாளையம் புதூர் கிளை ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகசுந்தரம், கிருஷ்ணசாமி, பழனிச்சாமி, லோகநாதன், பிரகாஷ், மூர்த்தி, கோகுல் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.


Next Story