பள்ளியில் திருடிய ஆசாமி கைது


பள்ளியில் திருடிய ஆசாமி கைது
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் தனியார் பள்ளியில் திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். இவர் தன்னுடைய தந்தையை போல் பிரபல கொள்ளையனாக மாறி கைவரிசை காட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் தனியார் பள்ளியில் திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். இவர் தன்னுடைய தந்தையை போல் பிரபல கொள்ளையனாக மாறி கைவரிசை காட்டியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

ஒலிபெருக்கி திருட்டு

மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் இந்த பள்ளிக்குள் புகுந்த ஒரு மர்ம ஆசாமி அலுவலகத்தில் வைத்திருந்த ஒலி பெருக்கியை திருடி சென்றான். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் ெபாருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

ஆசாமி கைது

போலீசாரின் விசாரணையில் பள்ளியில் ஒலி பெருக்கியை திருடியது மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்த நவ்சாத் மகன் ஜெசீம் (வயது 22) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் ஜெசீமை மார்த்தாண்டத்தில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஜெசீம் ஏற்கனவே பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று திரும்பி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தந்தையை போல் கைவரிசை

இவருடைய தந்தையும் பிரபல கொள்ளையனாம். இவர் மீதும் பல வழக்குகள் உள்ளன. தற்போது வயதாகி விட்டதால் திருட்டு தொழிலை கைவிட்டதாக தெரிகிறது.

அதே சமயத்தில் ஜெசீம் தந்தையின் வழியை தொடர்ந்துள்ளார். படிப்பை பாதியிலேயே விட்ட ஜெசீமும் தனி ஆளாக திருடுவதில் கைதேர்ந்தவர். மார்த்தாண்டம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் கைவரிசை காட்டியுள்ளார். அதாவது யாருடைய துணையுமின்றி அவர் மட்டும் தான் திருடுவாராம். பின்னர் திருடிய பணத்தில் உல்லாச வாழ்க்கை அனுபவிப்பாராம்.

வீடு புகுந்து திருடுவது, பெண்களிடம் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபடும் ஜெசீம் சில நேரங்களில் இதுபோன்ற சின்ன, சின்ன திருட்டிலும் ஈடுபட்டுள்ளார். சில திருட்டு வழக்குகளில் போலீசார் கைது செய்து ஜெசீமை சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் ஜாமீனில் வந்து மீண்டும் கைவரிசை காட்டுவதை வழக்கமாக இருக்கிறார் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story