மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

கட்டிடத்தின் மேல் நின்று விளையாடிய மாணவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் வாணியம்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடி
கட்டிடத்தின் மேல் நின்று விளையாடிய மாணவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் வாணியம்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாணவன்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா. இவரது மகன் சுஹேப் (வயது 11)் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றவன் நேற்று காலை வரையில் வீட்டுக்கு வரவில்லை இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.
அவர்கள் புதிதாக கட்டி வரும் கட்டிடத்தின் மேல் பகுதிக்கு சென்றபோது அங்கு சுருண்டு விழுந்து கிடந்தான்.
வீட்டின் மேல் தளத்தில் விளையாட சென்றபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.
இறப்பு
உடனடியாக சுஹேப்பை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில் சுஹேப் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.