காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில்அறிவியல் கண்காட்சி


காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில்அறிவியல் கண்காட்சி
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில்அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினத்தில் முகைதீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளித்துணைத் தலைவர் சையது அப்துல் காதர் தலைமை தாங்கினார். உதவி தலைவர் முகமது லெப்பை, தாளாளர் முகமது சம்சுதீன், நிர்வாகக்குழு உறுப்பினர் ருக்னுதின், பள்ளி முதல்வர் ரத்தினசாமி, தலைமை ஆசிரியை சுரோமணி ஜெயமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட்சிபோட்டியில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வாவு வஜிஹா பெண்கள் கல்லூரி பேராசிரியை புஷ்பா கலந்து கொண்டார்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கண்காட்சி ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அகமது பர்ஹா மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story