ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மீண்டும் அனுமதிக்க வேண்டும்; விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்


ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மீண்டும் அனுமதிக்க வேண்டும்; விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
x

ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

தண்ணீர் திறக்க வேண்டும்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். மேலும் மனுக்களை அளித்தனர்.

இதில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் ேபசுகையில், திருமானூர் ஒன்றியத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் தா.பழூர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பொன்னாறு வாய்க்கால் ஆகியவற்றில் விரைவில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுக்கிரன் ஏரி, தூத்தூர் பெரிய ஏரி ஆகிய ஏரிகளில் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். வி.கைகாட்டியில் ஆவின் நிறுவனம் மூலம் சுமார் 50 ஆயிரம் லிட்டர் பால் பதப்படுத்தும் குளிரூட்டும் நிலையம் அமைக்க நடவடிக்கை வேண்டும். கூடுதல் உரங்களை இறக்குமதி செய்து, தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், என்றார்.

மணல் அள்ள அனுமதி

அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து பேசுைகயில், பணி செய்கின்ற கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் தங்கி பணிபுரிய செய்ய வேண்டும். பொறியியல் துறையில் டிராக்டர் பழுதாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு உழவு பணி செய்வதில் காலதாமதம் ஆகிறது. எனவே டிராக்டரை உடனடியாக பழுது நீக்கி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு விவசாய பொருட்களான தேங்காய், புளி, உளுந்து போன்றவற்றை, மதியம் 2 மணிக்குள் எடை பார்க்க வேண்டும். புறம்போக்கு நிலங்களில் முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், என்றார்.

விவசாய பிரதிநிதி விஸ்வநாதன் பேசுகையில், வண்டல் மண் எடுக்க மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும். அதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளது வேதனை அளிக்கிறது. முறைகேடாக வண்டல் மண் எடுத்தால் அபராதம் விதித்து வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். அதைவிடுத்து மொத்தமாக வண்டல் மண் எடுக்க தடை விதிக்கக்கூடாது. அந்தந்த பகுதியில் வாழும் மணல் மாட்டுவண்டி ஓட்டுபவர்கள் மணல் அள்ளும் வகையில் அனுமதி வழங்க வேண்டும், என்றார். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசினர். இதில் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story