அதிக பாரம் ஏற்றி சென்ற 5 லாரிகள் பறிமுதல்


அதிக பாரம் ஏற்றி சென்ற 5 லாரிகள் பறிமுதல்
x

அதிக பாரம் ஏற்றி சென்ற 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை வழிமறித்து சோதனை செய்தனர்.

இதில் 5 லாரிகளில் அளவுக்கு அதிகமாக எம்.சாண்ட், ஜல்லி கற்கள் லோடு போன்றவற்றை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 5 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story