ரூ.25 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
நாகை பகுதியில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை சுகாதார ஆய்வாளர்கள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
நாகை பகுதியில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை சுகாதார ஆய்வாளர்கள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
ஆய்வு
நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் வந்தது. அதன் பேரில் புகையிலை கட்டுப்பாட்டு மையம் மாவட்ட ஆலோசகர் டாக்டர் பிரதாப் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், மணிமாறன், ராகுல், கணேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர், நாகை புத்தூர் முதல் ஆழியூர் வரை உள்ள பகுதிகளில் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
ரூ.25 ஆயிரம் புகையிலை
இதில் புகையிலை விற்பனை செய்ததாக 10 கடை உரிமையாளர்களுக்கு ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை வழங்கினர்.
இந்த ஆய்வில் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் கோகுலநாதன், நலக்கல்வியாளர் மணவாளன் உள்பட பலர் உடன் இருந்தனர்.