நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அமைக்க இடம் தேர்வு


நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அமைக்க இடம் தேர்வு
x

நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே குனிச்சி ஊராட்சியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குனர் அ.சிவஞானம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாணிப கழக கிடங்கில் இருப்பில் உள்ள குடிமை பொருட்கள் மற்றும் அதன் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

முன்னதாக தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் 2022-23-ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் சமூக கூட்டாண்மை பொறுப்பு திட்ட நிதியின் கீழ் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாணவ, மாணவியருக்கான கல்லூரி விடுதியில் 2 ஸ்மார்ட் வகுப்பறைகள், பள்ளி மாணவ- மாணவியருக்கான விடுதியில் 8 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்த ரூ.16 லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண்மை இயக்குனர் அ.சிவஞானம், கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தாசில்தார் சிவப்பிரகாசம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு மேலாளர் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story