4, 5-ம் வகுப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வு

அரசு தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு இறுதி பருவத்தேர்வு நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு இறுதி பருவத்தேர்வு நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:-
பருவத்தேர்வு
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எஸ்.சி.இ.ஆர்.டி. சார்பில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான 4-ம் பருவ தேர்வுக்கான வினாத்தாள்கள் அதற்கான விடைப்பகுதி தமிழ், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன்படி எஸ்.சி.இ.ஆர்.டி. வழங்கும் கொள்குறி மதிப்பீட்டையோ நாங்கள் அல்லது பள்ளியில் ஆசிரியர்களே தயாரித்த வினாத்தாளர்களையோ கொண்டு பருவத் தேர்வுகளை நடத்தி கொள்ளலாம்.
அறிவுறுத்தல்
இது தவிர ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறைமூலமாக மதிப்பீடு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், திருச்சி, சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பெறப்பட்ட பிரிண்டரை பயன்படுத்தி வினாத்தாள்களை பிரதி எடுத்து தேர்வை நடத்திக்கொள்ளலாம். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.