கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை


கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை
x

மகேந்திரமங்கலத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் ஒன்றியம் மகேந்திரமங்கலம் ஊராட்சியில் 15-வது நிதி குழு மானியம் மற்றும் என்.ஆர்.ஜி.எஸ். சார்பில் ரூ.37 லட்சம் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மாரியம்மன் கோவில் வரை சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் மற்றும் ஹாலோ பிளாக் கற்கள் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் முனியம்மாள் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் கனகா மாதையன், முன்னாள் தலைவர் முத்துராஜ், ஊராட்சி செயலாளர் சிவலிங்கம் உள்பட பலர் கொண்டனர்.


Next Story