கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரம்


தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் பேரூராட்சி 4-வது வார்டில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில் செல்லும் வழியில் கல்வெட்டு மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க பொதுமக்கள் பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பேரூராட்சி தலைவர் தனது சொந்த நிதியில் இருந்து கழிவுநீர் கால்வாய், கல்வெட்டு அமைக்கும் பணிக்கு நிதி வழங்கினார். இதையடுத்து இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணியை பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி சோபன்பாபு, கோகுல்ராஜ், நித்தியா முத்துக்குமார், அமுதா பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story