முழுநேர அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்


முழுநேர அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்
x

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை, முழுநேர அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ேறப்பட்டது.

திருப்பத்தூர்

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை, முழுநேர அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ேறப்பட்டது.

நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாதனூரில் நடந்தது. மாநில தலைவர் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பி.அனுராதா தேவி, மாநில பிரச்சார அணி செயலாளர் ஏ.ரமேஷ், மாவட்ட மகளிர் அணித் தலைவி டி.சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர் சங்க திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ஜெ.தமயந்தி வரவேற்றார்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கோ.சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.கண்ணன், துணை ஒருங்கிணைப்பாளர் ஜி.புருஷோத்தமன், துணைத் தலைவர் ஆர்.கண்ணம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

முழுநேர பணியாளர்களாக...

கூட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை முழுநேர அரசு பணியாளராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அமல்படுத்திய தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவிப்பது.

அங்கன்வாடி பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பணி ஓய்வு பெறும் போது வழங்கப்படும் ஒட்டுத் மொத்தத் தொகை பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமாக வழங்க வேண்டும்.

காய்கறி, மளிகை, எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாணவர்களுக்கு உணவூட்டும் செலவினம் ஒரு மாணவருக்கு ரூ.7 என்று இருப்பதை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன.

முடிவில் தாமோதரன் நன்றி கூறினார்.


Next Story