வேதாரண்யம் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்


வேதாரண்யம் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
x

வேதாரண்யம் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்புத்துறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர், பஞ்சநதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிப்புலம், செட்டிபுலம், நாகக்குடையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story