சித்த மருத்துவ முகாம்

பனப்பாக்கம் பேரூராட்சியில் சித்த மருத்துவ முகாம் நடந்தது.
ராணிப்பேட்டை
நெமிலி
பனப்பாக்கம் பேரூராட்சியில் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு பணியாளர்களுக்கு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார்.
முகாமில் பனப்பாக்கம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை, துப்புரவு மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு காய்ச்சல், சளி, மூக்கடைப்பு, கை, கால் மூட்டு வலி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் சித்த மருத்துவத்தை பற்றி விளக்கமாக கூறி வெற்றிலை பீடா, நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
இதில் அரசு சித்த மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர் ரவி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story