குப்பை கிடங்கை மாற்றக்கோரி கம்பம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை; மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது


குப்பை கிடங்கை மாற்றக்கோரி கம்பம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை; மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது
x

குப்பை கிடங்கை மாற்றக்கோரி கம்பம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

கம்பம் அருகே உள்ளது, நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை 7-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்தநிலையில் குப்பைக்கிடங்கில் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் துர்நாற்றம் வீசி வருவதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே நாராயணத்தேவன்பட்டியில் உள்ள குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும், குடிநீர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று கம்பம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் மோகன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் உள்பட 20 பேரை கைது செய்தனர்.


Next Story