பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது


பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது
x

தஞ்சையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை பூச்சந்தை மற்றும் மாரிக்குளம் சுடுகாடு அருகே அரிவாளுடன் சந்தேகம் படும் வகையில் சிலர் நிற்பதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் அந்தந்த பகுயில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூச்சந்தை பகுதியில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த தஞ்சை பூக்காரத் தெருவை சேர்ந்த முரளி (வயது 36), அசோக் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.இதேபோல் தஞ்சை மாரிக்குளம் சுடுகாடு பகுதியில் அரிவாள்களுடன் நின்ற முனியாண்டவர் காலனியை சேர்ந்த சக்திவேல் (30), ஆரோக்கியராஜ் (27), வடக்கு வாசலை சேர்ந்த ஜெய்சங்கர் (52), பூக்காரத்தெருவை சேர்ந்த கருப்பு பிரபா (32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் எதற்காக பயங்கர ஆயுதங்களுடன் நின்றனர் ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story