வேளாண் அறிவியல் மையத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி

சின்னமனூர் அருகே வேளாண் அறிவியல் மையத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
தேனி
சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு அசோலா மற்றும் மண்புழு உரம் உற்பத்திக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி நடந்தது. அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) மகேஸ்வரன் வரவேற்றார். முருகப்பா செட்டியார் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானிகள் சுகுமார், அருண்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். தொழில்நுட்ப வல்லுனர் அருண்ராஜ், கால்நடை டாக்டர் சிவசக்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர். விவசாயிகளுக்கு அசோலா மற்றும் மண் புழு வளர்ப்பு பாய்கள் இலவசமாக வழங்கப்பட்டன. முடிவில் தொழில்நுட்ப வல்லுனர் சபரிநாதன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story