மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்


மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:32 AM IST (Updated: 11 Jan 2023 3:25 PM IST)
t-max-icont-min-icon

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கோட்ட மின்வாரிய அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க அவரவர் வசிக்கும் இடங்களிலேயே சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) திருத்தங்கல், வடமலாபுரம், சுக்கிரவார்பட்டி, ஆனைக்குட்டம், ஆலமரத்துப்பட்டிரோடு, சிறுவர்பூங்காதெரு, ஆலாவூரணி, சத்யாநகர், கருணாநிதி காலனி, பனையடிப்பட்டி, 52 வீட்டு காலனி, ராதாகிருஷ்ணன் காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, பெரியார் காலனி, மகாத்மாகாந்தி நகர், பள்ளப்பட்டி, லிங்கபுரம் காலனி, முத்தாட்சிமடம், நம்மஅண்ணாச்சி நகர், செங்கமலநாச்சியார்புரம், ஸ்டேட்பேங்க் காலனி, கங்காகுளம், திருப்பதிநகர், சாரதாநகர், எம்.புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, பூர்ணசந்திரபுரம், பூவநாதபுரம், நாரணாபுரம், நாரணாபுரம் புதூர், லட்சுமியாபுரம், விநாயகர்காலனி, செங்கமலப்பட்டி, செல்லையா நாயக்கன்பட்டி, பூச்சக்காபட்டி, சல்வார்பட்டி, கட்டசின்னம்பட்டி, நமஸ் கரித்தான்பட்டி, தேவர்குளம், வடபட்டி, ஈஞ்சார் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story