பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை


பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 23 April 2023 1:00 AM IST (Updated: 23 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

ரம்ஜான் பண்டிகையையொட்டி சேலம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு தொழுகை

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் டவுன் ஜாமியா பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். சிறுவர், சிறுமிகள் புத்தாடை அணிந்து இந்த தொழுகையில் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதேபோல் சேலம் கோட்டை பகுதி, சன்னியாசி குண்டு, முள்ளுவாடி கேட், செவ்வாய்பேட்டை, 4 ரோடு, ஏற்காடு அடிவாரம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, சேலம் புதிய பஸ்நிலையம் என மாநகரில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் முஸ்லிம்கள் பலர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமும், சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ்-அப் போன்றவற்றிலும் ரம்ஜான் வாழ்த்துகளை பதிவு செய்தனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்கள் அனைத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் சேலம் மத்திய சிறையில் நோன்பு இருந்த முஸ்லிம்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.


Next Story