ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு


ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

லெட்சுமாங்குடி ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடியில் ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு வடமாலை, அருகம்புல் மாலை மற்றும் மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story